மனிதன் தனது ஆண் குறியின் அமைவிடத்தை "உயிர்நிலை" என்பான். காரணம் அது உயிர்களை உண்டாக்க பயன்படும் மிக முக்கிய செயல்பாட்டு உறுப்பாகும். அதனால் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளான் இறைவன்.
சாதாரண தினங்களில் மனிதன் தன் மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில் செக்ஸ் தேவையில்லை. அப்போது ஆணுறுப்புக்கு ரத்தம் உபரியாகப் போகாமல் "சிம்பத்தட்டிக் நெர்வ்ஸ் சிஸ்டம்" கட்டுப்படுத்தி விடுகிறது. அதனால் "அந்த உறுப்பு" காற்று போன பலூன் போல தாழ்ந்து கிடக்கிறது
ஆணுறுப்பின் செயல்பாடு இரு விதக் நரம்புக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஒரு நரம்பு அமைப்பு அதன் விறைப்பைத் தடுக்கிறது மற்றொரு நரம்பு அமைப்பு விறைப்பை ஏற்படுத்துகிறது. இது வியப்பான விசயம்.
மூளையில் அல்லது ஏதாவது ஒரு இன்ப ஞாபகத்திலோ, வாசனையாலோ( மல்லிகை) அல்லது ஒரு காதல் எண்ணத்தாலோ ... தொடுதல், கையாளுதல் , அதைத் தொந்தரவு செய்தல், இப்படி ஏதாவது செயலுக்கு உட்படுத்தப்படும் போது வரும் சமிக்ஞையால் தூண்டப்படுகிறது. நரம்பு மண்டலம் இதற்கான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களை சமிக்ஞை வந்ததும் அவிழ்த்து விடுகிறது . நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல்கோலைன், டோப்பாமைன் போன்றவை இதற்கு முக்கியம். இதனால் ஆணுறுப்புக்குப் போகும் ரத்தக் குழாய்கள் பெரிதாகி அதிக ரத்தம் பாய்கிறது அதில் இருக்கும் பஞ்சு போன்ற அறைகள் எல்லாம் ரத்தத்தால் நிரம்புகின்றன. இதனால அதன் உள்ளறைகள் பெரிதாகி ரத்தக் குழாய்களை மூடிவிடுகின்றன. உள்ளே ரத்தம் நிரம்பி வெளியேறாமல் தேங்கி விடுவதால் விரைத்து ஆணுறுப்பு பெரிதாகிறது.
நவீன ஆய்வின்படி இதைக் கட்டுப்படுத்தும் இடத்தை மிக துல்லியமாக கண்டுபிடித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். நரம்பு மண்டலத்தில் முதுகுத்தண்டில் D12 க்கும் S 3 க்கும் இடையே வெர்டிப்ராவில் ஓரிடம் உள்ளது. அந்த இடத்தில் தொட்டால் "ஆணுறுப்பு" உடனே விரைத்து நிற்கும். ஆணுறுப்புக்கு மேலே வரும் போது அதற்குள் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது இதைக் கட்டுப்படுத்துவது மூளையும் மைய நரம்பு மண்டலமும்தான். இதைப் பலர் ஆராய்ந்திருக்கிறார்கள் விரைப்பில் வரும் கோளாறுகளை ஆராய "எரக்டைல் டிஸ்ஃபங்ஷன்" என்ற ஓர் இயலே இருக்கிறது. இந்த இயல்தான் வயாகரா போன்ற மருந்துகளை கொண்டு குறையாத விரைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை கண்டு பிடித்திருக்கிறது.
இத்தனை விரைப்புத் தேவையா ?
இத்தனை விரைப்பு தேவையா என்பதை அறிந்துகொள்ளும் முன் மனிதர்கள் தவிர மற்றவை எப்படி செக்ஸ் செய்கிறது என்று பார்ப்போமா?
பூச்சிகள், சிறு சிறு முக்கோண வடிவில் வலையைப் பின்னி அதற்குள் தங்களின் விந்துவை சேர்க்கும் அப்புறம்தான் தேக்கரண்டி வடிவிலிருக்கும் தன் காலை உபயோகித்து அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி தள்ளிக் கொண்டு வந்து பெண் உறுப்பில் சேர்க்கும். எவ்வளவு கஷ்டம் பார்த்திங்களா?
தாவரங்கள் இனச் சேர்க்கைக்கு தங்களது பூக்களுக்கு அதிகமாக நிறம், மணம் கொடுத்து பூச்சியையும் வண்டையையும் தன் பக்கம் இழுத்து பூக்களில் தேனை அன்பளிப்பாக கொடுத்து அதன் மீது தேனை தடவி அதில் மகரந்த தூள்களை ஒட்டும்படி செய்து பக்கத்து தாவரத்தின் பூக்களில் சூல் பைக்குள் தூவி விட வேண்டும் .எத்தனை கடினம் பார்த்தீங்களா? அழகு படுத்தி வாசனைப்பூசி கவர்ந்திழுக்க வேண்டும் வண்டுகளை... அப்பத்தான் சமாச்சாரமே நடக்கும். சில நேரங்களில் இது மனிதர்களுக்கும் பொருந்தும் இல்லையா?
பல்லி மாதிரி தோற்றமுடைய "நியூட்" உட்பட சில முதுகெலும்பற்ற பிராணிகள் தங்கள் ஜோடிகளைக் கண்டு பிடித்து அழைத்து வந்து ஏற்கனவே தனது பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த விந்துவை பெண்ணுக்குள் செலுத்துகின்றன. அதுவரை வேறு ஒரு ஆண் வராமல் இருக்க வேண்டும் வந்தால் சண்டை தான். அப்புறம் சேர்த்து வைத்த விந்து வீணாகி ... .அட போங்கப்பா சண்டையில கிழியாத சட்டையா?
பவளப்பாறை மாதிரி சில கடல் உயிரினங்கள் ஒரே நேரத்தில் தங்கள் விந்து அல்லது சினை முட்டையை கடலிலேயே ரிலீஸ் செய்து அவை ஒன்றோடொன்று சேரும்படி இயற்கைதான் செய்கின்றன.
ஆனால் இது மாதிரி கஷ்டங்கள் எதுவுமின்றியும் விந்து சரியாகப் போய் உரிய இடத்தில் சேர்ந்திடுமா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடந்து கொள்ளக்கூடியவை மனிதன், குரங்கு, ஆடு, மாடு மாதிரியான பாலூட்டி வகையறாக்கள்தான் எதற்கு வம்பு என்று கருப்பை வரையிம் விந்துவை பாதுகாப்பாகக் கொண்டு போய்ச் சேர்க்க ஆணுறுப்புக்கு நீளமும் விரைப்பும் தேவையாக இருக்கிறது . மேலும் ஆண் பெண் இருபாலருக்கும் மிகவும் பிடித்த ஒரு சுகமும் மன அமைதியும் கிடைக்கிறது. மனிதனைத்தான் இறைவன் எவ்வளவு அற்புதமாக படைத்துள்ளான். வாழ்க்கையை அதன் ஒழுங்கில் வாழுங்கள் அந்த சுகத்தையும் முறையாக அனுபவியுங்கள். இன்புற்றிருங்கள்.

No comments:
Post a Comment