Monday, 10 April 2017

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?


இப்போ பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எளிமையானது. ஆன்லைனிலேயே சந்திப்பு நேரம் வாங்கிடலாம். இப்போவே ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை பண்ணிடலாம் வாங்க.! தேவையான இணைப்புகளோடு இங்கே வழங்கப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றினால் இன்றே உங்களுக்கான பாஸ்போர்ட் கிடைக்கும் முக்கால்வாசி வேலையை முடித்து விடலாம், வாங்க ஆரம்பிக்கலாம்.! 




 01. முதலில் இங்கே வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் வழியாக ரிஜிஸ்டர் நிகழ்த்த வேண்டும். ரிஜிஸ்டர் நிகழ்த்த இங்கே கிளிக் செய்யவும். https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/user/RegistrationBaseAction?request_locale=en


02. இப்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட லாக் இன் ஐடி கொண்டு பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டலுக்குள் உள்நுழையவும்.

03. உள்நுழைந்து "புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் / பாஸ்போர்ட் மறுபதிப்பு" இணைப்பை அதாவது ஆங்கிலத்தில் Apply for Fresh Passport/Re-issue of Passport - என்பதை கிளிக் செய்யவும்.

04. அங்கு உங்களுக்கு கிடைக்கும் படிவத்தில் கேட்கப்படும் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிய பின்னர், அந்த படிவத்தை சமர்ப்பிக்கவும்.

05. பின்னர், திரையில் தோன்றும் 'வியூ சேவ்டு/ சப்மிடெட் அப்ளிகேஷன்ஸ்' என்பதை கிளிக் செய்து உங்களுக்கான ஒரு நியமனத்தை திட்டமிட "பே அண்ட் ஷெட்யூல் அப்பாயின்ட்மென்ட்' என்ற தேர்வை நிகழ்த்திக் கொள்ளவும்


அனைத்து பாஸ்போர்ட் சேவா கேந்திரா / பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் சந்திப்புகளுக்கான முன்பதிவு கட்டணம் என்பது கட்டாயம் என்பதால் இங்கு நீங்கள் ஒரு ஆன்லைன் பேமெண்ட்தனை நிகழ்த்த வேண்டியதிருக்கும். ஆக பின்வரும் ஏதாவ்துவொரு ஆன்லைன் பேமெண்ட் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் பேமெண்ட் நிகழ்த்திக்கொள்ளலாம்.

06. இப்போது உங்களின் விண்ணப்ப குறிப்பு எண் (Application Reference Numbe-ARN)/அப்பாயின்மென்ட் நம்பர் ஆகிய விவரங்களை பெற 'ப்ரிண்ட் அப்பிளிக்கேஷன் ரெசிப்ட்' என்பதை கிளிக் செய்யவும்.

07. இறுதியாக நீங்கள் உங்களின் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் (RPO) அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்கு (பிஎஸ்கே) அசல் ஆவணங்களுடன் நியமிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று மேற்படியான விதிமுறைகளை செய்ய வேண்டியது மட்டுமே மிச்சம்.

நியமனம் இல்லாமல்.? அவசர / மருத்துவ வழக்குகள் மற்றும் முன்அனுமதிப்பெற்ற பிரிவுகள் மட்டுமே நியமனம் இல்லாமல் பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்கு வரலாம். அவ்வகை சேவைகளானது பொறுப்பாளர் / பாஸ்போர்ட் அதிகாரி பாஸ்போர்ட் சேவா கேந்திரா தீர்மானத்தின்படி வழங்கப்படும்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சிறுவர்/ சிறுமியர் விண்ணப்பதாரர்கள் என்றால் (அதாவது 4 வயதிற்குள்) அவர்கள் வெள்ளை பின்னணியில் எடுக்கப்பட்ட சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (4.5 எக்ஸ் 3.5 செ.மீ) கொண்டு வர வேண்டும்.

90 நாட்களுக்குள் மேலும் வழக்கில் ஒரு விண்ணப்பதாரர் ஆன்லைன் படிவம் சமர்ப்பிப்த்த 90 நாட்களுக்குள் பாஸ்போர்ட் சேவா கேந்திரா செல்லவில்லை என்றால் விண்ணப்பபடிவத்தை மறுமுறை சமர்ப்பிக்க வேண்டும்.
இனி எளிதாக ஆன்லைனில் நீங்களும் பதிவு செய்யலாம்.
http://passportindia.gov.in/AppOnlineProject/online/apptAvailStatus



Saturday, 8 April 2017

இத்தனை விரைப்புத் தேவையா ?

மனிதன் தனது ஆண் குறியின் அமைவிடத்தை "உயிர்நிலை" என்பான். காரணம் அது உயிர்களை உண்டாக்க பயன்படும் மிக முக்கிய செயல்பாட்டு உறுப்பாகும். அதனால் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளான் இறைவன்.

சாதாரண தினங்களில் மனிதன் தன் மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில் செக்ஸ் தேவையில்லை. அப்போது ஆணுறுப்புக்கு ரத்தம் உபரியாகப் போகாமல் "சிம்பத்தட்டிக் நெர்வ்ஸ் சிஸ்டம்" கட்டுப்படுத்தி விடுகிறது. அதனால் "அந்த உறுப்பு" காற்று போன பலூன் போல தாழ்ந்து கிடக்கிறது

ஆணுறுப்பின் செயல்பாடு இரு விதக் நரம்புக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஒரு நரம்பு அமைப்பு அதன் விறைப்பைத் தடுக்கிறது மற்றொரு நரம்பு அமைப்பு விறைப்பை ஏற்படுத்துகிறது. இது வியப்பான விசயம்.

மூளையில் அல்லது ஏதாவது ஒரு இன்ப ஞாபகத்திலோ, வாசனையாலோ( மல்லிகை) அல்லது  ஒரு காதல் எண்ணத்தாலோ ... தொடுதல், கையாளுதல் , அதைத் தொந்தரவு செய்தல், இப்படி ஏதாவது செயலுக்கு உட்படுத்தப்படும் போது வரும் சமிக்ஞையால் தூண்டப்படுகிறது.  நரம்பு மண்டலம் இதற்கான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களை சமிக்ஞை வந்ததும் அவிழ்த்து விடுகிறது . நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல்கோலைன், டோப்பாமைன் போன்றவை இதற்கு முக்கியம்.  இதனால் ஆணுறுப்புக்குப் போகும் ரத்தக் குழாய்கள் பெரிதாகி அதிக ரத்தம் பாய்கிறது அதில் இருக்கும் பஞ்சு போன்ற அறைகள் எல்லாம் ரத்தத்தால் நிரம்புகின்றன. இதனால அதன் உள்ளறைகள் பெரிதாகி ரத்தக் குழாய்களை மூடிவிடுகின்றன. உள்ளே ரத்தம் நிரம்பி வெளியேறாமல் தேங்கி விடுவதால் விரைத்து ஆணுறுப்பு பெரிதாகிறது. 

நவீன ஆய்வின்படி இதைக் கட்டுப்படுத்தும் இடத்தை மிக துல்லியமாக கண்டுபிடித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். நரம்பு மண்டலத்தில் முதுகுத்தண்டில் D12 க்கும் S 3 க்கும் இடையே வெர்டிப்ராவில் ஓரிடம் உள்ளது. அந்த இடத்தில் தொட்டால் "ஆணுறுப்பு" உடனே  விரைத்து நிற்கும். ஆணுறுப்புக்கு மேலே வரும் போது அதற்குள் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது இதைக் கட்டுப்படுத்துவது மூளையும் மைய நரம்பு மண்டலமும்தான். இதைப் பலர் ஆராய்ந்திருக்கிறார்கள் விரைப்பில் வரும் கோளாறுகளை ஆராய "எரக்டைல் டிஸ்ஃபங்ஷன்" என்ற ஓர் இயலே இருக்கிறது. இந்த இயல்தான் வயாகரா போன்ற மருந்துகளை கொண்டு குறையாத விரைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை கண்டு பிடித்திருக்கிறது.

இத்தனை விரைப்புத் தேவையா ?

இத்தனை விரைப்பு தேவையா என்பதை அறிந்துகொள்ளும் முன் மனிதர்கள் தவிர மற்றவை எப்படி செக்ஸ் செய்கிறது என்று பார்ப்போமா?
பூச்சிகள், சிறு சிறு முக்கோண வடிவில் வலையைப் பின்னி அதற்குள் தங்களின் விந்துவை சேர்க்கும் அப்புறம்தான் தேக்கரண்டி வடிவிலிருக்கும் தன் காலை உபயோகித்து அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி தள்ளிக் கொண்டு வந்து பெண் உறுப்பில் சேர்க்கும். எவ்வளவு கஷ்டம் பார்த்திங்களா?

தாவரங்கள் இனச் சேர்க்கைக்கு தங்களது பூக்களுக்கு அதிகமாக நிறம், மணம் கொடுத்து பூச்சியையும் வண்டையையும் தன் பக்கம் இழுத்து பூக்களில் தேனை அன்பளிப்பாக கொடுத்து அதன் மீது தேனை தடவி அதில் மகரந்த தூள்களை ஒட்டும்படி செய்து பக்கத்து தாவரத்தின் பூக்களில் சூல் பைக்குள் தூவி விட வேண்டும் .எத்தனை கடினம் பார்த்தீங்களா? அழகு படுத்தி வாசனைப்பூசி கவர்ந்திழுக்க வேண்டும் வண்டுகளை... அப்பத்தான் சமாச்சாரமே நடக்கும். சில நேரங்களில் இது மனிதர்களுக்கும் பொருந்தும் இல்லையா?

ல்லி மாதிரி தோற்றமுடைய "நியூட்" உட்பட சில முதுகெலும்பற்ற பிராணிகள் தங்கள் ஜோடிகளைக் கண்டு பிடித்து அழைத்து வந்து ஏற்கனவே தனது பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த விந்துவை பெண்ணுக்குள் செலுத்துகின்றன. அதுவரை வேறு ஒரு ஆண் வராமல் இருக்க வேண்டும் வந்தால் சண்டை தான். அப்புறம் சேர்த்து வைத்த விந்து வீணாகி ... .அட போங்கப்பா சண்டையில கிழியாத சட்டையா?

வளப்பாறை மாதிரி சில கடல் உயிரினங்கள் ஒரே நேரத்தில் தங்கள் விந்து அல்லது சினை முட்டையை கடலிலேயே ரிலீஸ் செய்து அவை ஒன்றோடொன்று சேரும்படி இயற்கைதான் செய்கின்றன.

ஆனால் இது மாதிரி கஷ்டங்கள் எதுவுமின்றியும் விந்து சரியாகப் போய் உரிய இடத்தில் சேர்ந்திடுமா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடந்து கொள்ளக்கூடியவை மனிதன், குரங்கு, ஆடு, மாடு மாதிரியான பாலூட்டி வகையறாக்கள்தான் எதற்கு வம்பு என்று கருப்பை வரையிம் விந்துவை பாதுகாப்பாகக் கொண்டு போய்ச் சேர்க்க ஆணுறுப்புக்கு நீளமும் விரைப்பும் தேவையாக இருக்கிறது . மேலும் ஆண் பெண் இருபாலருக்கும் மிகவும் பிடித்த  ஒரு சுகமும் மன அமைதியும் கிடைக்கிறது. மனிதனைத்தான் இறைவன் எவ்வளவு அற்புதமாக படைத்துள்ளான். வாழ்க்கையை அதன் ஒழுங்கில் வாழுங்கள் அந்த சுகத்தையும் முறையாக அனுபவியுங்கள். இன்புற்றிருங்கள்.


Monday, 3 April 2017

பானகம்

பானகம் என்பது கோடைக்காலத்தில் உடலில் நீர் வறட்சியை சரி செய்து, தேவையான நீர்ச்சத்தைக் கொடுத்து வெயில் கால நோய்களிலிருந்து காக்கும் அருமையான பானமாகும். 

தேவை: 
வெல்லம் - 200கிராம்
புளி - 50 கிராம்
பொடித்த சுக்கு - ஒரு தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் - ஒரு விரல்பிடி
ஏலக்காய் - 2
புதினா இலைகள் - 5
எலுமிச்சைப்பழம் - 1

செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். புளியையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெல்லக்கரைசலுடன் புளிக்கரைசலையும் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் புதினா சேர்த்து பறிமாறலாம். இது சுவை மிக்க பானமாகும். 
வெல்லத்திற்கு பனை வெல்லம் சேர்த்து செய்தால் சுவை கூடும். சில்லென்று அருந்த விரும்புபவர்கள் குளிர்வித்தும் அருந்தலாம் இதமாக இருக்கும்.